போதை பொருளுடன் சுற்றிய கர்நாடக வாலிபர் கைது
கீழ்ப்பாக்கம்,
சென்னை பெருநகர் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு தனிப்படை போலீசாருக்கு, கீழ்ப்பாக்கத்தில் போதை பொருளுடன் வாலிபர் சுற்றுவதாக, ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி, நேற்று காலை கீழ்ப்பாக்கம் போலீசார், கொங்குரெட்டி சுரங்கப் பாலம் அருகே கண்காணித்தனர்.
அப்போது, சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்த போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.
அவரை சோதித்த போது, அவரிடம் மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருள் இருந்தது தெரிந்தது.
விசாரணையில், கர்நாடக மாநிலம், பெங்களூரு பகுதியைச் சேர்ந்த ஜீவா, 23, என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 29 கிராம் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: இ.பி.எஸ்., பேட்டி
-
மோடியை சசி தரூர் புகழ்வதற்கு காரணம் என்ன; பா.ஜ., எம்.எல்.ஏ., கூறுவது இதுதான்!
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
-
''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு
-
லோக்சபாவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்: அனல் பறக்கும் விவாதம்!
-
கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
Advertisement
Advertisement