'பேட்'டால் முதியவரை தாக்கிய பெண்கள் உட்பட 3 பேர் மீது வழக்கு

சென்னை, சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் வீரப்பன், 72. இவரது வீட்டருகே, தெருவில் கிரிக்கெட் விளையாடிய பெண்கள் அடித்த பந்து, அவரது பேத்தி மீது விழுந்துள்ளது. இதை, வீரப்பன் தட்டிக்கேட்டுள்ளார்.

அப்போது, அவரது வீட்டின் அருகே வசிக்கும் தனலட்சுமி, சந்தியா மற்றும் ஜெகன் ஆகியோர் சூழ்ந்து, வீரப்பனை கிரிக்கெட் 'பேட்'டால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்து சூளைமேடு போலீசார் விசாரித்தனர்.

தொடர் விசாரணையில், தாக்குதலுக்கு உள்ளான வீரப்பன், மூன்று ஆண்டுகளுக்கு முன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக, 'போக்சோ' வழக்கில் கைதாகி சிறை சென்று வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை 'போக்சோ' நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், முதியவரை தாக்கிய வழக்கில் மூன்று பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement