விற்பனை குழு குளிர்பதன கிடங்குகளில்விளைபொருட்களை வைக்க அழைப்பு
விற்பனை குழு குளிர்பதன கிடங்குகளில்விளைபொருட்களை வைக்க அழைப்பு
ஈரோடு:ஈரோடு மாவட்ட வேளாண் விற்பனை குழுவின் கீழ், 2,975 டன் விளை பொருட்களை குளிர்பதன கிடங்கில் வைக்கும் வசதி உள்ளது. இதுபற்றி, வேளாண் விற்பனை குழு செயலர் மற்றும் வேளாண் துணை இயக்குனர் சாவித்ரி கூறியதாவது:
மாவட்ட அளவில் வேளாண் விற்பனை குழுவின் கீழ், 57 குடோன்கள் உள்ளன. அதில், 74,904 டன் விளைபொருட்களை இருப்பு வைத்து, உரிய விலை கிடைக்கும்போது விற்கலாம். குடோன்களில் ஒரு குவிண்டால் விளைபொருளுக்கு விவசாயிகளுக்கு, நாள் ஒன்றுக்கு, 25 காசு, வியாபாரிகள் வைத்தால், 50 காசு கட்டணம் பெறப்படும். அதிகபட்சம் மஞ்சளுக்கு, 365 நாட்களும், பிற விளை பொருளுக்கு, 180 நாட்கள் வரை இருப்பு
வைக்கலாம்.தவிர குளிர் பதன கிடங்குகள் அந்தியூர், அவல்பூந்துறை, கொடுமுடி, புன்செய் புளியம்பட்டியில் தலா, 25 டன் குடோன், சித்தோடு, வெள்ளாங்கோவில், வெப்பிலியில் தலா, 250 டன் குடோன், சத்தியமங்கலத்தில், 125 டன் குடோன், தாளவாடி, பர்கூரில் தலா, 500 டன் குடோன், கோபியில், 1,000 டன் குடோன் என, 2,975 டன் பொருளை இருப்பு வைக்காலம்.
இவற்றில், ஆப்பிள் ஒரு பெட்டி - ஒரு மாதம் வைக்க, 15 ரூபாய், பழங்கள் ஒரு கிலோ, ஒரு மாதம் வைக்க, 60 காசுகள், காய்கறிகள், பூக்கள், 3 நாட்கள் வைக்க கிலோவுக்கு, 1.50 ரூபாய், கேரட் ஒரு குவிண்டால், 1 மாதத்துக்கு, 35 ரூபாய், மிளகாய் ஒரு டன் ஒரு மாதத்துக்கு, 500 ரூபாய் கட்டணம் பெறப்படுகிறது. இவ்வாறு கூறினார்.
மேலும்
-
ராஜ்யசபாவில் வக்ப் மசோதா தாக்கல்; விறுவிறுப்பான விவாதம்!
-
இறப்பிலும் இணை பிரியாத பாசமலர்கள்; தம்பி இறந்த அதிர்ச்சியில் அக்கா உயிரிழப்பு
-
2ம் கட்ட மெட்ரோ திட்ட ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்யுங்க; ராமதாஸ் வலியுறுத்தல்
-
ஞானசேகரன் மீதான வழக்குகள்; தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
-
நீர்நிலையில் குப்பையை கொட்டியதால் வந்த வினை; பின்னணி பாடகருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
-
உங்கள் நாடகத்துக்கு சட்டசபையை பயன்படுத்தாதீர்; முதல்வருக்கு அண்ணாமலை வேண்டுகோள்