ராஜ்யசபாவில் வக்ப் மசோதா தாக்கல்; விறுவிறுப்பான விவாதம்!

4


புதுடில்லி: ராஜ்யசபாவில் கேள்வி நேரம் முடிந்ததும், வக்ப் திருத்த சட்ட மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். மசோதா மீதான விவாதம் நடந்து வருகிறது.

வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா, எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பின் நிறைவேறியது. வக்ப் சொத்துகளை அரசு கையகப்படுத்தும் முயற்சி என்று எதிர்க்கட்சிகள் வைத்த குற்றச்சாட்டை, அரசு மறுத்தது.



இந்நிலையில், இன்று (ஏப்ரல் 03) ராஜ்யசபாவில் கேள்வி நேரம் முடிந்ததும், வக்ப் திருத்த சட்ட மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். பின்னர் அவர் ராஜ்யசபாவில் பேசியதாவது: இன்றைய நிலவரப்படி, 8.72 லட்சம் வக்ப் சொத்துக்கள் உள்ளன. வக்ப் திருத்த மசோதா 2025ஐ ஆதரிக்குமாறு காங்கிரஸ் கட்சியையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


மசோதா மீதான விவாதம் நடந்து வருகிறது. விவாதத்திற்கு பிறகு மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறினால், ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும். பின், விரைவில் இது சட்டமாகும். அதைத் தொடர்ந்து, தற்போதுள்ள, வக்ப் சட்டங்கள் காலாவதியாகும். புதிய திருத்த வக்பு சட்டம் நடைமுறைக்கு வரும்.

Advertisement