உங்கள் நாடகத்துக்கு சட்டசபையை பயன்படுத்தாதீர்; முதல்வருக்கு அண்ணாமலை வேண்டுகோள்

சென்னை: ''தயவு செய்து உங்கள் அரசியல் நாடகத்திற்கு சட்டசபையை பயன்படுத்த கூடாது'' என முதல்வருக்கு அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., கூட்டணி எம்எல்ஏக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருப்பதும், வக்ப் திருத்தச்சட்ட மசோதாவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தை நாடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது எதிர்பார்த்தது தான். வக்பு மசோதா எதிர்ப்பு சிறுபான்மையினர் வாக்கு வங்கியை காப்பாற்றும் நாடகம்.
முந்தைய வக்பு சட்டத்தால் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டதை தமிழக முதல்வர் உணரவில்லையா? தயவு செய்து உங்கள் அரசியல் நாடகத்திற்கு சட்டசபையை பயன்படுத்த கூடாது. முதல்வர் ஸ்டாலினின் தொடர்ச்சியான நாடகம், அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முன்பு"2025 வக்ப் மசோதாவை எதிர்க்க அப்பாவின் முயற்சிகள்" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுத முடியும்.
இதை ஒரு தேர்தல் தளமாக்கி, 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் மற்றும் 2029ம் ஆண்டு லோக்சபா தேர்தல்களில் முஸ்லிம்களை தவறாக வழிநடத்தவும், ஏமாற்றவும் பிரிக்கவும் மட்டுமே தி.மு.க.,வுக்குத் தெரியும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.













மேலும்
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்; பெண்கள், குழந்தைகள் உட்பட 112 பேர் உயிரிழப்பு
-
அகழாய்வில் கிடைத்தது அஞ்சனக்கோல்; சிறப்புகள் ஏராளம்!
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
அமெரிக்க வாகன உதிரி பாகங்கள் மீது 25 சதவீத வரி விதிப்பு: கனடா பதிலடி
-
சாலை விபத்தில் சிறுவன் பலி பைக் கொடுத்த மாமன் கைது புதுச்சேரி போலீசார் அதிரடி
-
மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது