இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்

அருப்புக்கோட்டை: திருச்சுழி போலீஸ் ஸ்டேஷனில் 2012 ல், முத்து, 53, இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தார். திருச்சுழி அருகே செல்லையாபுரத்தில் வீட்டு பிரச்சனை சம்பந்தமான வழக்கு 2014ல், திருச்சுழி ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்டு முத்து விசாரணை செய்தார்.

வழக்கு அருப்புக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் முத்து நேரில் ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், சார்பு நீதிபதி செல்வன் ஜேசுராஜா, திருச்சுழி இன்ஸ்பெக்டர் முத்துவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். தற்போது, விருதுநகர் மாவட்ட தனி பிரிவு இன்ஸ்பெக்டராக முத்து உள்ளார்.

Advertisement