ஜார்க்கண்டில் சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்; லோகோ பைலட்டுகள் இருவர் உயிரிழப்பு

8


ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் லோகோ பைலட்டுகள் இருவர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.


ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில், இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் லோகோ பைலட்டுகள் இருவர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து அதிகாலை 3 மணி அளவில் நடந்துள்ளது என மீட்பு படை அதிகாரி தெரிவித்தார். மேலும், அவர், 'இரண்டு சரக்கு ரயில்களின் லோகோ பைலட்டுகள் உயிரிழந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது, என்றார்.

Advertisement