லாலு பிரசாத் யாதவ் கவலைக்கிடம்

21

புதுடில்லி: பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், 76, உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.


இருதய நோயாளியான லாலு பிரசாத்துக்கு, வேறு சில உடல் உபாதைகளும் உள்ளன. இன்று அவரது உடல் நலம் மிகவும் மோசமானதை தொடர்ந்து, அவர் பாட்னா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவரது ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகியவை ஏற்ற இறக்கத்துடன் உள்ளன. எனினும் கவலைப்பட எதுவும் இல்லை என்று கட்சி தலைவர்களில் ஒருவரான பாய் விரேந்திரா தெரிவித்தார்.
ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அவரை இன்று இரவுக்குள் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு அவருக்கு மும்பை மருத்துவமனையில் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement