அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை சந்திப்பு

புதுடில்லி:அ.தி.மு.க., மூத்த தலைவர் தம்பிதுரை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பார்லிமென்ட் வளாகத்தில் இன்று சந்தித்துப் பேசினார்.
முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான இ.பி.எஸ்., கடந்த வாரத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். வரும் சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி அமைப்பது தொடர்பாக இரு தரப்பினரும் பேசியதாக தகவல்கள் வெளியாகின. இ.பி.எஸ்., அதை மறுத்து விட்டார்.
ஆனாலும், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உறுதி என்றும், அதற்கு வசதியாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவார் என்றும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகின்றன.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, அ.தி.மு.க., மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான தம்பிதுரை இன்று சந்தித்துப் பேசினார்.
பார்லிமென்ட் வளாகத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது





மேலும்
-
25 ஆயிரம் மேற்குவங்க ஆசிரியர்கள் பணிநீக்கம்; உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
-
தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்கும் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.,
-
மேடையில் தவறி விழுந்தார் ஆஸி., பிரதமர் ஆன்டனி அல்பனீஸ்
-
பாதுகாப்பு படையினர் தொடர் அதிரடி; பலம் இழந்த மாவோயிஸ்டுகள் கதறல்!
-
டிரம்ப் வர்த்தகப் போர் எதிரொலி: உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி
-
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் ரத்தாகுமா: தமிழக அரசின் மனுவை நாளை விசாரிக்கிறது ஐகோர்ட்