வேலைவாய்ப்பை தடுக்கும் சுயநல அரசியல்வாதிகள்: ஸ்டாலினை விமர்சித்த யோகி ஆதித்யநாத்

53

லக்னோ: அரசியல் நலன்களுக்காக மொழி சர்ச்சையை உருவாக்குபவர்கள் இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை தடுக்கின்றனர் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக குற்றம்சாட்டி உள்ளார்.


@1brதமிழகத்தில் மும்மொழிக்கு எதிரான நிலைப்பாட்டை தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எடுத்துள்ளன. மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த மாட்டோம், இரு மொழிக் கொள்கையே போதுமானது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இந்த விஷயத்தில் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தி.மு.க., கூட்டணியை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந் நிலையில் மும்மொழி விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினை, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.


இதுகுறித்து அவர் பி.டி.ஐ., செய்தி நிறுவனத்துக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் யோகி ஆதித்யநாத் கூறியதாவது;


இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை மட்டுமே பாதிக்கும் வகையில் சுயநலன் சார்ந்த அரசியல் நலன்களுக்காக மும்மொழி பற்றிய சர்ச்சை உருவாக்கப்பட்டு வருகிறது. உ.பி.,யில் உள்ள பள்ளிகளில் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன.


இந்த முறை, இங்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வழிவகுத்துள்ளது. உ.பி.,யில் நாங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளை கற்பிக்கிறோம். அதனால் உ,.பி., சிறியதாகிவிட்டதா? இங்கு தான் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.


தங்களின் குறுகிய அரசியல் நலன்களுக்காக இதுபோன்ற மொழி சர்ச்சையை உருவாக்குபவர்கள், அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் அவர்கள் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை தடுக்கின்றனர்.


இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார்.

Advertisement