2026ல் மார்ச் 31க்குள் நக்சலிசம் ஒழிக்கப்படும்; அமித்ஷா திட்டவட்டம்

15


புதுடில்லி: ''வரும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நக்சலிசத்தை நிரந்தரமாக ஒழிக்க இந்தியா தயாராக உள்ளது'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அமித்ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நக்சல் இல்லாத பாரதத்தை உருவாக்க மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று நமது நாட்டில், இடதுசாரி தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 12ல் இருந்து வெறும் 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது ஒரு புதிய மைல்கல்.



பா.ஜ., அரசு நக்சலிசத்தை ஒழிக்க இரக்கமற்ற அணுகுமுறையை பின்பற்றி வருகிறது. இடைவிடாத முயற்சிகளுடன் வளர்ச்சியை உருவாக்கி வருகிறோம். நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக வரும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் வேரோடு நக்சலிசத்தை ஒழிக்க உறுதிபூண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement