லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா அபாரம்; குஜராத்துக்கு 170 ரன்கள் இலக்கு

பெங்களூரு: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்துள்ளது.


பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 14வது போட்டியில் பெங்களூரு, குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சின்னசாமி மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய பெங்களூரு அணி, குஜராத் பவுலர்களின் வேகத்தை சமாளிக்க முடியாமல் திணறினர். விராட் கோலி 7 ரன்களில் அர்ஷத் கான் பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

தொடர்ந்து, 3வது ஓவரில் படிக்கல்லின் (4) விக்கெட்டை கைப்பற்றினார் குஜராத் அணியின் சிராஜ். சிராஜ் வீசிய 5வது ஓவரின் 3வது பந்தில் இமாலய சிக்சரை அடித்தார் பில் சால்ட்; இதற்கு அடுத்த பந்திலேயே அவரை அவுட்டாக்கி சிராஜ் பழிதீர்த்தார். நடக்கும் பெங்களூருக்கு எதிரான போட்டியின் பவர் பிளேவில் குஜராத் பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தியது. பெங்களூரு அணி, 6 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. தொடர்ந்து, 12 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் பட்டிதார், இஷாந்த் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து, ஜிதேஷ் ஷர்மா (34), லிவிங்ஸ்டன் ஜோடி சேர்ந்து அணியை மெல்ல மெல்ல சரிவில் இருந்து மீட்டனர். ஜிதேஷ் ஷர்மா (34), லிவிங்ஸ்டன் (54), டிம் டேவிட் (30 நாட் அவுட்) ஆகியோரின் இறுதிகட்ட பங்களிப்பால், பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை குவித்தது.

குஜராத் அணி தரப்பில் சிராஜ் 3 விக்கெட்டுக்களும், சாய் கிஷோர் 2 விக்கெட்டுக்களும், அர்ஷத் கான், இஷாந்த் ஷர்மா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Advertisement