கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு

சென்னை: கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு மத்திய அரசால் புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. புவிசார் பெற்ற பொருட்களை வியாபார நோக்கத்தோடும், போலியாக வேறு பெயர்களில் பயன்படுத்துவதையும் தடுக்க முடியும்.
அந்த வகையில் தமிழகத்தில் திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்குடி சேலை, காஞ்சி பட்டு, மதுரை மல்லிகை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், பழநி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு உட்பட பல்வேறு உணவு, வேளாண் மற்றும் பாரம்பரிய உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.
சமீபத்தில், மதுரை மரிக்கொழுந்து மற்றும் விளாச்சேரி களிமண் பொம்மைகளுக்கு புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று (ஏப்ரல் 01) கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (1)
Petchi Muthu - TIRUNELVELI,இந்தியா
01 ஏப்,2025 - 16:11 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஐ ஆம் ஜஸ்ட் 98
-
வக்ப் வாரிய விவகாரங்களில் அரசின் தலையீடு இருக்காது; பார்லியில் அமித் ஷா உறுதி!
-
ஒன்றுபட்ட அ.தி.மு.க., - பா.ஜ.,வுடன் கூட்டணி; சைதை துரைசாமி வலியுறுத்தல்
-
லாலு பிரசாத் யாதவ் கவலைக்கிடம்
-
பிரியாணி, சவர்மா சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி; பிலால் ஹோட்டலுக்கு சீல்
-
அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை சந்திப்பு
Advertisement
Advertisement