மலேசியாவில் காஸ் குழாய் வெடித்தது; தீப்பிழம்புகள் எழுந்ததால் பரபரப்பு: 100 பேர் காயம்

2

கோலாலம்பூர்: மலேசியாவில் தலைநகர் கோலாலம்பூருக்கு வெளியே பெட்ரோனாஸ் நிறுவனத்தின் காஸ் குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் 100 பேர் காயமடைந்தனர்.


மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸ் பகுதியில் பெட்ரோனோஸ் என்ற அரசு எரிசக்தி நிறுவனத்திற்கு சொந்தமான காஸ் குழாயில் இன்று (ஏப்.,01) வெடிப்பு ஏற்பட்டது.

500 மீட்டர் நீளமுள்ள குழாயில் தீப்பிடித்து, பல நுாறு அடி உயரத்துக்கு தீப்பிழம்புகள் எழுந்தது. இதனால் 33 பேர் காயம் அடைந்தனர். தீயை அணைக்கும் முயற்சியில் அந்நாட்டு மீட்புக் குழுவினர் தீவிரம் ஈடுபட்டு உள்ளனர். இன்னும் இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.



பாதிக்கப்பட்ட மக்களை தற்காலிக நிவாரண மையத்தில் தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இதில், 100 பேர் காயமடைந்தனர். அணுகுண்டு வெடித்துச் சிதறியது போன்று தீப்பிழப்பு கொளுந்துவிட்டு எரியும் வீடியோ காட்சி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement