அன்போடு... அன்போடு... அன்போடு...! பா.ஜ., எம்.எல்.ஏ.,வுக்கு முதல்வர் பதில்

25


சென்னை: ''நயினார் நாகேந்திரன் அன்போடு, அன்போடு என கேட்கும் கோரிக்கைகளை நாங்களும் அன்போடு பரிசீலிப்போம்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின், இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடியது. நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணி துறை மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.



விவாதத்தின் போது பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் பல்வேறு கோரிக்கையை முன் வைத்தார்.


இதற்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நமது சட்டசபை பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் எல்லாத்திற்கும் நன்றி சொன்னார். நாங்கள் நன்றியை எதிர்பார்க்கவில்லை.


அதேநேரத்தில், நீங்கள் பேசுகிற ஒவ்வொரு கோரிக்கையாக இருந்தாலும் சரி, செய்து முடித்திருக்கும் காரியமாக இருந்தாலும் சரி, அன்போடு, அன்போடு, அன்போடு என்று தான் சொல்லி இருக்கீங்க.

நீங்கள் பேசியதை எடுத்து பாருங்க, ஒவ்வொரு வார்த்தை முடிக்கும் போது அன்போடு, அன்போடு என்று சொல்லி இருக்கீங்க, நாங்களும் கோரிக்கையை, அன்போடு பரிசீலிப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். இதற்கு சபாநாயகர் அப்பாவு சிரித்தார்.

Advertisement