குஜராத்தில் பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து; 18 பேர் பலி; 4 பேர் காயம்

4

ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.


குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டம் தீசா நகர் தொழிற்பேட்டையில் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பட்டாசு ஆலையில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. கட்டடம் தரைமட்டமானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.

தரைமட்டமான பட்டாசு ஆலையில் இருந்து படுகாயங்களுடன் 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.




இந்த விபத்து குறித்து, பனஸ்கந்தா மாவட்ட கலெக்டர் மிஹிர் படேல் கூறியதாவது: இன்று காலை, தீசாவில் உள்ள தொழில்துறை பகுதியில் ஒரு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தினர். இடிபாடுகளுக்கு சிக்கிய தொழிலாளர்களை மீட்க நாங்கள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.

Advertisement