டேபிள் டென்னிஸ்: மணிகா தோல்வி

இன்ச்சான்: உலக டேபிள் டென்னிஸ் முதல் சுற்று போட்டியில் மணிகா பத்ரா தோல்விடைந்தார்.
தென் கொரியாவில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நேற்று துவங்கியது. பெண்கள் ஒற்றையரில் இந்தியா சார்பில் மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா பங்கேற்கின்றனர். 'ரவுண்டு-16' போட்டியில் மணிகா பத்ரா ('நம்பர்-27'), ஜூனியர் உலகின் முன்னாள் சாம்பியன், 'நம்பர்-12' ஆக உள்ள சீனாவின் தியான்யி குயான் மோதினர்.
முதல் செட்டை 2-11 என இழந்த மணிகா பத்ரா, அடுத்த செட்டை 11-8 என கைப்பற்றினார். பின் ஏமாற்றிய இவர், அடுத்த இரு செட்டுகளை 3-11, 6-11 என கோட்டை விட்டார். முடிவில் மணிகா பத்ரா, 1-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். கடைசியாக பங்கேற்ற 9 சர்வதேச தொடரின் முதல் சுற்றில், இவர் அடைந்த 8வது தோல்வி இது.

Advertisement