கும்மிடிப்பூண்டி தடத்தில் 21 மின்சார ரயில்கள் ரத்து
சென்னை, ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில், இன்றும், 5ம் தேதியும் 21 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.
சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கவரைப்பேட்டை - பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையே, ரயில் பாதை மேம்பாட்டு பணி நடக்க உள்ளன. இதனால், இன்றும் 5ம் தேதியும் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
★ சென்ட்ரல் - சூலுார்பேட்டை அதிகாலை 5:40, காலை 10:15, 10:30, 11:35 நண்பகல் 12:10, சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மதியம் 1:40 மணி ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது
★ சூலுார்பேட்டை - நெல்லுார் காலை 8:10, சூலுார்பேட்டை - சென்ட்ரல் மதியம் 12:35, 1:15, 3:10 ஆவடி - சென்ட்ரல் காலை 4:25 மணி ரயில்கள் ரத்து செய்யப்படும்
★ கடற்கரை - கும்மிடிப்பூண்டி நண்பகல் 12:40, மதியம் 2:40, கும்மிடிப்பூண்டி - கடற்கரை மாலை 4:30 மணி ரயில்கள் ரத்து செய்யப்படும்
★ கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் மதியம் 1:00, 1:15, 2:30, 3:15, 3:45, நெல்லுார் - சூலுார்பேட்டை காலை 10:20 மணி ரயில்கள் ரத்து செய்யப்படும்
★ செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி காலை 9:55 மணி ரயில் கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும்
★ கும்மிடிப்பூண்டி - தாம்பரம் மாலை 3:00 மணி ரயில் கடற்கரையில் இருந்து இயக்கப்படும்
சிறப்பு ரயில்கள்
★ சென்ட்ரல் - பொன்னேரிக்கு காலை 10:30, மீஞ்சூருக்கு காலை 11:35, மதியம் 1:40, கடற்கரை - எண்ணுாருக்கு பகல் 12;40 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்
★ கடற்கரை - பொன்னேரிக்கு மதியம் 2:40, பொன்னேரி - சென்ட்ரலுக்கு மதியம் 1:18 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்
★ மீஞ்சூர் - சென்ட்ரலுக்கு மாலை 3:00, 3:56, மாலை 4:14, சென்னேரி - கடற்கரை மாலை 4:47 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: கோல்கட்டா அணி 200 ரன்கள் குவிப்பு
-
கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என்று சிலருக்கு நப்பாசை; மார்க்சிஸ்ட் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
25 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்க தீர்ப்பை ஏற்க மாட்டேன்; ஆனால் அதனை செயல்படுத்துவோம்: சொல்கிறார் மம்தா
-
பீஹார், மேற்குவங்கம், தமிழகத்திற்கு அமித் ஷா பயணம்
-
வளர்ச்சியை நம்புகிறோம்: எல்லை விரிவாக்கத்தை அல்ல: பிரதமர் மோடி
-
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கச்சத்தீவு மீட்பு மட்டுமே: முதல்வர் ஸ்டாலின்