சம்பள பற்றாக்குறை வாலிபர் தற்கொலை

போரூர், போரூர், ஸ்ரீ ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் கார்த்திக், 36. இவர், தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து, வீட்டிற்கு வந்து அறைக்குள் சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், அவரது மனைவி சென்று பார்த்துள்ளார்.

அப்போது கார்த்திக் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. தகவல் அறிந்து வந்த போரூர் போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், கார்த்திக் எழுதிய கடிதம் போலீசார் கைப்பற்றினர்.

அதில், இந்த சம்பளத்தை வைத்துக் கொண்டு, இந்த சூழ்நிலையில் என்னால் வாழ முடியவில்லை. எனவே, நான் செல்கிறேன் என, எழுதி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

குடும்ப செலவிற்காக, கார்த்திக் கடன் வாங்கி இருந்ததாகவும், அதை திருப்பி செலுத்த முடியாத நிலைளை ஏற்பட்டதால், மன உளைச்சலில் தற்கொலை செய்தது தெரியவந்தது.

Advertisement