குத்துச்சண்டை: லக்சயா ஏமாற்றம்

புதுடில்லி: உலக குத்துச்சண்டை கோப்பை முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சகார் தோல்வியடைந்தார்.
பிரேசிலில் உலக குத்துச்சண்டை கோப்பை தொடர் நடக்கிறது. 6 நாள் நடக்கும் இத்தொடரில் 19 நாடுகளில் இருந்து 130 பேர் பங்கேற்றுள்ளனர். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அங்கீகாரம் கிடைத்த பின் உலக குத்துச்சண்டை அமைப்பு நடத்தும் முதல் தொடர் இது. 2028, லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ளது புதிய எடைப் பிரிவுகளில் இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்கும் முதல் தொடர். தவிர, பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் பின் இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் இதில் களமிறங்குகின்றனர்.
இந்தியாவின் சச்சின் (60 கிலோ), விஷால் (90) என இருவரும் நேரடியாக அரையிறுதியில் பங்கேற்க உள்ளனர். 80 கிலோ பிரிவு முதல் சுற்றில் தேசிய 'ஹெவிவெயிட்' சாம்பியன் லக்சயா சஹார், உலக சாம்பியன்ஷிப்பில் (2023) வெள்ளி வென்ற பிரேசிலின் வாண்டெர்லி பெரெய்ராவை சந்தித்தார். இதில் லக்சயா 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
இரண்டாவது நாள் நடக்கும் போட்டியில் இந்தியா சார்பில் ஜடுமணி சிங் (50 கிலோ), நிகில் துபே (75), ஜக்னுா (85) களமிறங்குகின்றனர்.
மேலும்
-
முதுநிலை பேராசிரியர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அவசியம்
-
16 ஆண்டுகளாக தி.மு.க., எதுவும் செய்யாதது ஏன்? எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கேள்வி
-
சம்பள பற்றாக்குறை வாலிபர் தற்கொலை
-
கும்மிடிப்பூண்டி தடத்தில் 21 மின்சார ரயில்கள் ரத்து
-
'காசா கிராண்டு' புதுப்பாக்கம் திட்டத்தில் மூத்த குடிமக்களுக்காக பிரத்யேக வீடுகள்
-
சட்டத்தை ஏற்க மாட்டோம் என்று கூற எவருக்கும் உரிமை இல்லை: அமித் ஷா