மழைநீர் வடிகாலில் இருந்து சாலையில் தேங்கும் கழிவுநீர்

சாலிகிராமம்,கோடம்பாக்கம் மண்டலம், சாலிகிராமம் 129வது வார்டில் ராஜாஜி காலனி உள்ளது. இச்சாலையில், மழைநீர் வடிகால் அமைந்துள்ளது. இதில், சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, ராஜாஜி காலனி மழைநீர் வடிகாலில் இருந்து கழிவுநீர் வெளியேறி, சாலையில் தேங்கியுள்ளது.

இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. எனவே, மழைநீர் வடிகாலில் உள்ள அடைப்புகளை அகற்றுவதுடன், சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளையும் துண்டிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement