விருதுநகரில் காஸ் சிலிண்டர் வெடித்து 21 குடிசைகள் சேதம்

விருதுநகர்:விருதுநகரில் காஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 21க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சேதமாகின.

விருதுநகர் மேலத்தெருவில் சிவன் கோயில் அருகே 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இதில் தகர செட், குடிசைகள் அமைத்து ஒரு பகுதி மக்கள் வசிக்கின்றனர். நேற்று அதிகாலை 3:50 மணிக்கு ராஜா என்பவரது வீட்டில் காஸ் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது.

அடுத்தடுத்த வீடுகளில் மளமளவென பரவியது. துாக்கத்திலிருந்த மக்கள் அலறியடித்து வெளியேறினர். 3 தீயணைப்பு துறை வாகனங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அடுத்தடுத்தும், எதிர்புறமுள்ள 21 வீடுகளின் கூரைகள், தகர செட்டுகள் முற்றிலும் எரிந்தன. மக்கள் அனைவரும் வெளியேறி விட்டதால் உயிர் சேதம் இல்லை.

தீ விபத்தில் சான்றிதழ்களை இழந்தவர்கள் சிறப்பு முகாம் நடத்தி வழங்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.

Advertisement