பாலத்தின் இணைப்பு சாலை சீரமைக்கும் பணி எப்போது?

பொன்னேரி:பொன்னேரி அடுத்த மெதுாரில் இருந்து வேம்பேடு, கோளூர் வழியாக தேவம்பட்டு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில், ஆவூர் கிராமம் அருகே மழைநீர் செல்வதற்கான சிறுபாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான இணைப்பு சாலை சேதமடைந்து உள்ளது.
இதுகுறித்து இரண்டு மாதங்களுக்கு முன் நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து சேதமடைந்த பகுதிகளை அகற்றிவிட்டு, ஜல்லிக் கற்களை கொட்டி நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுத்தது.
அரைகுறையாக விடப்பட்ட இணைப்பு சாலை சீரமைப்பு பணிகளால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தற்போது, அப்பகுதியில் ஜல்லிக் கற்கள் பெயர்ந்தும், பள்ளங்கள் ஏற்பட்டும் உள்ளதால், பாலத்தை கடக்கும்போது வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர்.
இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து சிறு சிறு விபத்துகளில் சிக்கி வருகின்றனர். ஜல்லிக் கற்களில் இருந்து புழுதி பறப்பதால், சுவாச கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பாலத்தின் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: கோல்கட்டா அணி 200 ரன்கள் குவிப்பு
-
கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என்று சிலருக்கு நப்பாசை; மார்க்சிஸ்ட் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
25 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்க தீர்ப்பை ஏற்க மாட்டேன்; ஆனால் அதனை செயல்படுத்துவோம்: சொல்கிறார் மம்தா
-
பீஹார், மேற்குவங்கம், தமிழகத்திற்கு அமித் ஷா பயணம்
-
வளர்ச்சியை நம்புகிறோம்: எல்லை விரிவாக்கத்தை அல்ல: பிரதமர் மோடி
-
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கச்சத்தீவு மீட்பு மட்டுமே: முதல்வர் ஸ்டாலின்