எஸ்.டி.ஏ.டி., நீச்சல் குளங்களில் கோடை கால பயிற்சி துவக்கம்
சென்னை,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், சென்னை மாவட்டத்தில், ஷெனாய் நகர், மெரினா கடற்கரை, வேளச்சேரி ஆகிய இடங்களில் நீச்சல் குளங்கள் செயல்படுகின்றன. இவற்றை பொதுமக்கள், தினசரி பயிற்சியாளர்கள், நீச்சல் வீரர்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், நேற்று முதல் 12 நாட்களுக்கு, கோடை கால நீச்சல் பயிற்சி வகுப்புகள் துவங்கியுள்ளன. இதற்கு, கட்டணமாக, 2,360 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
நேற்று துவங்கிய வகுப்புகள், 13ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அடுத்தடுத்த வகுப்புகள், 15 - 27; ஏப்., 29 - மே 11; மே 13 - 25; மே 27 - ஜூன் 8 வரை நடக்க உள்ளன.
இதில், பயிற்சியை நிறைவு செய்வோருக்கு, சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் சேர, 'https//www.sdat.tn.gov.in/' என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, 74107 03480 என்ற மொபைல் எண்ணிலோ, 044 - 2664 4794 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
மேலும்
-
பங்குனி உத்திர திருவிழா சபரிமலையில் கொடியேற்றம்
-
ஆரணி ஆற்று கரைகளை சீரமைப்பதில் அலட்சியம் குடியிருப்புகளுக்குள் புகும் வெள்ளநீரால் பரிதவிப்பு
-
பேருந்து பணிமனை திட்டம் அம்போ கழிவுநீர் குட்டையாக மாறிய அவலம்
-
விருதுநகரில் காஸ் சிலிண்டர் வெடித்து 21 குடிசைகள் சேதம்
-
பாலத்தின் இணைப்பு சாலை சீரமைக்கும் பணி எப்போது?
-
திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்