'ஜிம்' உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு

அடையாறு, அடையாறு மண்டலம், 173வது வார்டு, வள்ளுவர் நகரில், 600 சதுர அடி பரப்பு இடம் உள்ளது. அதில், ரேஷன் கடை கட்ட, 16 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், 174வது வார்டு, சாஸ்திரி நகர், ஊரூர் குப்பம், 180வது வார்டில், திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள் மேம்பாடு மற்றும் உபகரணங்கள் வாங்க, 40 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதற்கான பணி, விரைவில் துவங்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

Advertisement