கொற்கை தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது

சென்னை:வேளாண் தொழில் வழித்தடத்தில் இடம்பெறும் திருவாரூர் மாவட்டம், கொற்கையில், சிறு நிறுவனங்கள் தொழில் துவங்க வசதியாக, 'சிட்கோ' நிறுவனம் தொழிற்பேட்டை அமைக்க, 15 ஏக்கர் கையகப்படுத்தி உள்ளது.

டெல்டா மாவட்டங்களில் வேளாண் மற்றும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் தொழில் துவங்க, திருச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களை உள்ளடக்கிய வேளாண் தொழில் பெரு வழித்தடத்தை, தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைக்கிறது.

அம்மாவட்டங்களில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் பொது வசதி மையம், தொழிற்பேட்டைகள், கிடங்கு உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

அதன்படி, திருவாரூர் திருத்துறைப்பூண்டியில் உள்ள கொற்கையில், 15 ஏக்கரில் தொழிற்பேட்டை அமைக்க, 'சிட்கோ' எனப்படும் தமிழக சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தி உள்ளது.

Advertisement