சூளகிரியில் வர்த்தக மையம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே, வர்த்தக மையம் அமைப்பதற்கான இடத்தை, 'டிட்கோ' அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.

சூளகிரியில் தொழில் துவங்க ஏராளமான நிறுவனங்கள் வர துவங்கியுள்ளன. அதனால், இங்கு வர்த்தக மையம் அமைக்க இடம் பார்க்கப்பட்டுள்ளது. இந்த இடம் உறுதி செய்யப்பட்டால், அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு, வர்த்தக மையம் அமைக்கப்படும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

இது குறித்து, ஓசூர் 'ஹோஸ்டியா' சங்க தலைவர் மூர்த்தியிடம் கேட்டபோது, ''சர்வதேச வர்த்தகத்தை வளர்க்க, பொது வர்த்தக மையம் உறுதுணையாக இருக்கும். தொழில்முனைவோருக்கு பயிற்சி அளிக்க முடியும். அவர்கள் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை காட்சிப்படுத்தி, உலகளவில் ஆர்டர்களை பெற முடியும்,'' என்றார்.

Advertisement