குறையும் பருத்தி மகசூல்

திருப்பூர்:நாட்டின் பருத்தி மகசூல், 294.25 லட்சம் பேல்களாக இருக்குமென, ஜவுளித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் (டாஸ்மா) தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறுகையில், ''புதிய பருத்தி ஆண்டு பட்டியலில், இறக்குமதியுடன் சேர்த்து மொத்த வரத்து, 366.35 லட்சம் பேல்களாக இருக்கும்.

''மொத்த தேவை, 336 லட்சம் பேல் என கணக்கிடப்பட்டுள்ளது. பருத்தி மகசூல் வரத்து, ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. ஜவுளித்துறையை பாதுகாக்க, சில மாதங்களாவது, பஞ்சு இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்,'' என்றார்.

Advertisement