துணை முதல்வர் மீது விமர்சனம் நடிகர் ஜாமின் பத்திரம் தாக்கல்

வானுார்:மஹாராஷ்டிரா நகைச்சுவை நடிகர் குனால் கம்ரா, சமீபத்தில் தன் யு டியூப் சேனலில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், ஏக்நாத் ஷிண்டே மஹாராஷ்டிரா துணை முதல்வரானது குறித்து விமர்சனம் செய்திருந்தார். தொண்டர்கள் யு டியூப் சேனலின் ஸ்டூடியோவை அடித்து நொறுக்கினர்.
குனால் கம்ரா மீது ஒரு வழக்கு, அவர் வீடியோ பதிவு செய்த ஸ்டூடியோவை சேதப்படுத்தியதற்காக சிவசேனா தொண்டர்கள் மீது என இரு வழக்குகளை மும்பை போலீசார் பதிவு செய்தனர்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் குனால் கர்மா, மார்ச் 28ல் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். மனுவில், தற்போது விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த ஆரோவில் பகுதி யில் வசித்து வருவதாகவும், மும்பை சென்றால் தன்னை போலீசார் கைது செய்வர். மேலும், சிவசேனா தொண்டர்களால் உயிருக்கு ஆபத்து உள்ளது. முன் ஜாமின் வழங்க வேண்டும் என, கேட்டுக்கொண்டார்.
விசாரித்த நீதிபதி, குனால் கம்ராவுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். வானுார் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி பிணை பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு குறித்து மஹாராஷ்டிரா, கார்க் போலீஸ் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஏப்., 7க்கு ஒத்திவைத்தார்.
தொடர்ந்து குனால் கம்ரா காலை, 10:30 மணிக்கு வானுார் நடுவர் மற்றும் உரிமையில் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பிரீத்தி முன்னிலையில் ஆஜராகி, பிணை பத்திரம் தாக்கல் செய்தார்.

மேலும்
-
கஞ்சா பறிமுதல் தண்டனை
-
டூவீலர்கள் மோதி விபத்து: ஒருவர் பலி, இருவர் காயம்
-
வீடுகளில் நகை பணம் திருட்டு
-
பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வில் 209 பேர் ஆப்சென்ட்
-
திண்டுக்கல்லில் நாளை கோலாகலமாக துவங்குகிறது தினமலர் வழிகாட்டி n பிளஸ் 2வுக்கு பின் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் n உயர்கல்வி ஆலோசனைகளை அள்ளி வழங்கும் நிகழ்ச்சி
-
இதற்கோர் வழி காணுங்க: ஜாதி பெயர்களை தாங்கி நிற்கும் ஊர் பெயர்கள்