இதற்கோர் வழி காணுங்க: ஜாதி பெயர்களை தாங்கி நிற்கும் ஊர் பெயர்கள்

மாவட்டத்தில் 306 ஊராட்சிகள் உள்ளன. இவ்வூராட்சிகளில் குறைந்தது 6 ஊர் முதல் 40 ஊர்கள் வரை உள்ளன. இந்த ஊர்களில் குறிப்பிட்ட இன மக்கள் ஒரே இடத்தில் வீடுகளைக் கட்டி கும்பலாக வாழ்ந்து வந்த நிலையில் அவர்கள் சார்ந்த ஜாதிகளின் பெயரிலே ஊர் பெயர்கள் உள்ளன. அந்த வகையில் நாயக்கனுார், கவுண்டனுார், வண்ணானுார், நல்லா கோனாம்பட்டி, செங்குந்தபுரம், முதலியார்பட்டி, சேர்வைகாரன்பட்டி, ரெட்டியபட்டி, காப்பிலியம்பட்டி, குரும்பபட்டி, பிள்ளமநாயக்கன்பட்டி, ஆண்டிய கவுண்டனுார், மறவபட்டி, குறவன்குளம், சக்கிலிய பட்டி என பட்டியல் நீள்கிறது. பஸ்களில் டிக்கெட் எடுக்க கூட மக்கள் வெட்கப்படும் வகையில் ஊர் பெயர்கள் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நடப்பு சட்டசபை கூட்ட தொடரிலே ஜாதிகளின் பெயரை தாங்கி நிற்கும் ஊர்களை அந்தந்த ஊர் மக்களின் ஒப்புதலோடு மாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்
ஜாதியில்லை, ஜாதிகளை ஒழிப்போம்,ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதியின் பாடல்களை கற்றுத் தரும் தமிழகத்தில் தான் பள்ளியில் சேரும்போதே என்ன சாதி என்று கேட்டு சேர்ப்பதும், ஜாதி சான்றிதழ் வழங்குவதும், ஜாதிகளின் அடிப்படையில் வேலைவாய்ப்புகள் வழங்குவதும் கூட ஒரு குற்றமே என்ற குமுறலும் ஒலிக்க தொடங்கி உள்ளது.
காலம் மாறிவிட்டது. மக்கள் மாறி விட்டார்கள் .இனி திறமைகளின் அடிப்படையிலே வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்து வருகிறது.
இது ஒரு புறம் இருக்க ஜாதிகளின் பெயரில் உள்ள கிராமங்களை அந்தந்த பகுதி மக்களின் 100 சதவீத ஒத்துழைப்போடு மாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.
மேலும்
-
சஷ்டியையொட்டி மண் சோறுசாப்பிட்ட பக்தர்கள்
-
நாளை மின் நுகர்வோர்குறைதீர் கூட்டம்
-
நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினர்தேர்வு: விண்ணப்பிக்க அழைப்பு
-
அரசு கலை அறிவியல் கல்லுாரியில்போதை பொருட்கள் விழிப்புணர்வு
-
பிளஸ் 2 படிக்கும் எஸ்.சி., எஸ்.டி.,மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி
-
பாதுகாப்பு இல்லாத கிணறுகம்பி வலை அமைக்கப்படுமா