வீடுகளில் நகை பணம் திருட்டு

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் 62. கொடைக்கானலுக்கு வேலைக்கு சென்றார். இவரது மனைவி அழகு உள்ளூரில் வேலைக்கு சென்றார்.

இருவரும் மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த தங்கத்தோடு, மோதிரம் உட்பட ரூ.2.50 லட்சம் மதிப்பிலான 5 பவுன் தங்க நகைகள் திருடு போனது. இவரது வீட்டருகே உறவினர் இந்திரா 52. என்பவரது வீட்டில் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம் திருடு போனது.

மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.-

Advertisement