மனைவி உயிரை காவு வாங்கிய கணவர் குடிப்பழக்கம்
திருநெல்வேலி:சங்கரன்கோவில் அருகே கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த மனைவி, மகள் விஷம் குடித்தனர். இதில் மனைவி பலியானார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சின்னகோவிலாங்குளம் வடக்கு மாவிலியூத்தை சேர்ந்தவர் கனகராஜ். விவசாயி. இவரது மனைவி திருமலைச்செல்வி 39. இவர்களுக்கு மகள் காயத்ரி 18, உட்பட 3 குழந்தைகள் உள்ளனர். காயத்ரி பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். கனகராஜிற்கு மது பழக்கம் உள்ளது. தினமும் மது போதையில் வீட்டில் தகராறு செய்வாராம். இதனால் மனமுடைந்த திருமலைச்செல்வி, காயத்ரியுடன் சேர்ந்து விஷம் குடித்தார்.
இருவரும் ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் திருமலைச்செல்வி இறந்தார். காயத்ரி சிகிச்சையில் உள்ளார். சின்ன கோவிலாங்குளம் போலீசார் விசாரித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திண்டுக்கல்லில் நாளை கோலாகலமாக துவங்குகிறது தினமலர் வழிகாட்டி n பிளஸ் 2வுக்கு பின் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் n உயர்கல்வி ஆலோசனைகளை அள்ளி வழங்கும் நிகழ்ச்சி
-
இதற்கோர் வழி காணுங்க: ஜாதி பெயர்களை தாங்கி நிற்கும் ஊர் பெயர்கள்
-
வசதிகள் இல்லை...நாய்கள்,கொசுக்கள் தொல்லை புலம்பலில் புஷ்பம்மாள் நகர்,சோபா நகர் குடியிருப்போர்
-
பழநிக்கு வந்தது ராம ரத யாத்திரை
-
முருங்கைக்கு இல்லை விலை; விவசாயிகள் பாதிப்பு
-
பிறந்த நாள் விழா
Advertisement
Advertisement