பழநிக்கு வந்தது ராம ரத யாத்திரை

பழநி: பழநி காளிதாஸ் சுவாமிகள் தர்மாஸ்ரமத்திற்கு கேரள மாநிலம் வளப்புறத்தை சேர்ந்த ஆஞ்சநேயர் ஆசிரமம் சார்பில் ராமநவமியை முன்னிட்டு ராம ரத யாத்திரை நடைபெற்றது.
இந்த யாத்திரை மார்ச் 31ல் கூடலுாரில் துவங்கி குன்னுார், கல்லார், மேட்டுப்பாளையம், கோயமுத்துார், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் வழியாக நேற்று மதியம் பழநி வந்தது.
காளிதாஸ் சுவாமிகள் ஆசிரமத்தில் சிறப்பு தரிசனம், அன்னதானம் நடைபெற்றது.
திண்டுக்கல், மதுரை நோக்கி ரத யாத்திரை சென்றது.
ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் மணிவண்ணன், ஹிந்து அமைப்பினர் ரத யாத்திரை வாகனத்தை வரவேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement