மின்துறை ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் தேர்வு

புதுச்சேரி : மின்துறை ஊழியர்கள் கூட்டுறவு கடன் வழங்கும் சங்க நிர்வாகிகள் தேர்தலில் 4வது முறையாக ஐ.டி.ஐ., நலச்சங்கம் வெற்றி பெற்றுள்ளது.

புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் கூட்டுறவு கடன் வழங்கும் சங்கத்திற்கான 2025-28ம் ஆண்டிற்கான இயக்குனர் குழு தேர்தல் கடந்த 23ம் தேதி நடந்தது.

இதில் மின்துறை ஐ.டி.ஐ., நலச்சங்கம், பில் கலெக்டர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் போட்டியிட்டன. கூட்டுறவு கடன் வழங்கும் சங்க உறுப்பினர்கள் 1130 பேர் பங்கேற்று ஓட்டு அளித்தனர்.

தேர்தலில், ஐ.டி.ஐ., நலச்சங்கம் தொடர்ந்து, 4வது முறையாக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து, வெற்றி பெற்ற இயக்குனர்கள் ஆலோசனைக் கூட்டம் மின்துறை தலைமை அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்தில், சங்கத்தின் புதிய தலைவராக தேவகுமார், துணைத் தலைவராக செல்வம், பொருளாளராக பாலச்சந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு முன்னாள் நீதிபதி அசோகன் வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து, சுகாதாரத்துறை துணை இயக்குனர் சுரேஷ் உள்ளிட்ட மின்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement