அடுத்து என்ன செய்யப் போறீங்க... அமெரிக்க வரிவிதிப்பு குறித்து கேட்கிறார் ராகுல்

13

புதுடில்லி: ''அமெரிக்க வரிவிதிப்பில் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்'' என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.


அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகளில் இறக்குமதிக்கான வரி விகித்தை அறிவித்தார். இதில் 15 நாடுகளுக்கு எவ்வளவு சதவீத வரி என்பது குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. இந்திய பொருட்களுக்கு 26 சதவீத இறக்குமதி வரி விதித்துள்ளார்.

லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசியதாவது: இந்தியாவின் மீது அமெரிக்கா விதித்த 26 சதவீதம் பரஸ்பர வரி நமது பொருளாதாரத்தை சீரழிக்க போகிறது. அமெரிக்க வரிவிதிப்பில் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள். நட்பு நாடு என கூறும் அமெரிக்கா அதிக வரிகளை விதிக்கிறது.



இந்தியாவுக்கு சொந்தமான 4,000 சதுர கி.மீ., நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது. இந்திய நிலங்களை சீனா திரும்ப கொடுக்க வேண்டும். பிரதமரும், ஜனாதிபதியும் சீனர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர் என்பதும் எனக்குத் தெரிய வந்துள்ளது. சீனத் தூதரிடமிருந்து தகவல் வந்தது. முஸ்லிம்களை ஓரங்கட்டவும், அவர்களின் தனிப்பட்ட சட்டங்கள் மற்றும் சொத்துரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் வக்ப் திருத்த மசோதா வழி வகுக்கும். இவ்வாறு ராகுல் பேசினார்.

Advertisement