ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் ரத்தாகுமா: தமிழக அரசின் மனுவை இன்று விசாரிக்கிறது ஐகோர்ட்

சென்னை: பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால் ஊட்டி, கொடைக்கானல் இ-பாஸ் நடைமுறை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இம்மனுவை சென்னை ஐகோர்ட் இன்று விசாரிக்கிறது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக, சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, கடந்த ஆண்டு மே, 7ம் தேதி முதல் இ -- பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. அதில், உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கோடையில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த, ஏப்., 1 முதல் ஊட்டிக்கு வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களும், இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்கள் அனுமதிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. இதன்படி நேற்று முன்தினம் முதல் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த உத்தரவு காரணமாக பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இ பாஸ் உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்தது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இம்மனுவை இன்று விசாரிப்பதாக தெரிவித்து உள்ளனர்.


மேலும்
-
'எம்புரான்' பட தயாரிப்பாளர் நிறுவனங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
-
கேரள முதல்வர் மகள் வீணாவுக்கு குறி; மோசடி வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி
-
மைக்ரோசாப்ட் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு; மலரும் நினைவுகளில் மூழ்கிய பில்கேட்ஸ்!
-
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பாதிரியார் சுட்டுக்கொலை
-
மங்களநாதர் சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
-
மருதமலை முருகன் கோவிலில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் பரவசம்