பாக். அதிபர் ஆசிப்அலி சர்தாரிக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் கிகிச்சை

கராச்சி: பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.



அதிபர் ஆசிப் அலி சர்தாரி (69) ரம்ஜான் தொழுகைக்காக கராச்சியில் இருந்து 300 கி.மீ.,தொலைவில் உள்ள நவாப் ஷா என்ற பகுதிக்கு சில நாட்கள் முன்பு சென்றிருக்கிறார். அதன் பின்னர், அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையும் நடத்தி உள்ளார்.


இந் நிலையில், சர்தாரிக்கு திடீரென காய்ச்சல் மற்றும் தொற்று உபாதை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் நவாப்ஷாவில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.


மருத்துவமனையில் சர்தாரிக்கு பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது. சர்தாரியின் உடல்நிலை குறித்து பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளார்.

Advertisement