7 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று(ஏப்.2) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. சில மாவட்டங்களில் வெப்பநிலையானது 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து கொதித்தது. அதே நேரத்தில் கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பரவலாக லேசான மழை பதிவாகியது.


இந் நிலையில், தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று (ஏப்.2) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் கூறி உள்ளதாவது;


அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை,தென்காசி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.


நாளைய (ஏப்.3) தினம் நீலகிரி,கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை,தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.


ஏப்.4ம் தேதி நீலகிரி,கோவை,திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி,திண்டுக்கல், மதுரை,விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை என 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.


ஏப்.5ம் தேதி கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.


ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் நீலகிரி,கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல்,மதுரை ஆகிய 7 மாவட்டங்களில் இன்று(ஏப்.2) முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement