'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்

லாஸ் ஏஞ்சல்ஸ்:'டாப் கன்' மற்றும் 'பேட்மேன் பார் எவர்' என்ற ஹாலிவுட் திரைப்பட புகழ் நடிகர் வால் கில்மர் தொண்டை புற்று நோயால் காலமானார்.
வால் கில்மர் 65, தொண்டை புற்றுநோயால் , கடந்த 2014 முதல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் குணமடைந்தார்.
வால் கில்மர்,அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டில் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் சூழப்பட்ட நிலையில் காலமானதாக அவரது மகள் மெர்சிடெஸ் கில்மர் உறுதி செய்துள்ளார்.
1983 ஆம் ஆண்டு ஸ்லாப் பாய்ஸுடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினாலும், டாம் குரூஸ் நடித்த டாப் கன் (1986) படத்தில் துணை வேடம் ஏற்று நடித்ததே கில்மரை ஒரு புகழ்பெற்ற நடிகராக அடையாளம் காட்டியது. 1991 ஆம் ஆண்டு, ஆலிவர் ஸ்டோனின் தி டோர்ஸில் ஜிம் மோரிசனாக நடித்ததன் மூலம் அவர் தனது புகழை அதிகரித்தார். இது டோம்ப்ஸ்டோன், ஹீட் மற்றும் பேட்மேன் பாரெவர் உள்ளிட்ட வெற்றிகரமான படங்களின் தொடரைத் தொடங்கியது. 90களின் நடுப்பகுதியில் சிறிது காலத்திற்கு, டாம் குரூஸ் மற்றும் ஜானி டெப் அவரை முந்திச் செல்வதற்கு முன்பு, புரூஸ் வில்லிஸ் மற்றும் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கரை முந்தி கில்மர் உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
ராஜ்யசபாவில் வக்ப் மசோதா தாக்கல்; விறுவிறுப்பான விவாதம்!
-
இறப்பிலும் இணை பிரியாத பாசமலர்கள்; தம்பி இறந்த அதிர்ச்சியில் அக்கா உயிரிழப்பு
-
2ம் கட்ட மெட்ரோ திட்ட ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்யுங்க; ராமதாஸ் வலியுறுத்தல்
-
ஞானசேகரன் மீதான வழக்குகள்; தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
-
நீர்நிலையில் குப்பையை கொட்டியதால் வந்த வினை; பின்னணி பாடகருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
-
உங்கள் நாடகத்துக்கு சட்டசபையை பயன்படுத்தாதீர்; முதல்வருக்கு அண்ணாமலை வேண்டுகோள்