பாதுகாப்பு படையினர் தொடர் அதிரடி; பலம் இழந்த மாவோயிஸ்டுகள் கதறல்!

ராய்ப்பூர்: பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்த மாவோயிஸ்டுகள், இப்போது பலம் இழந்துள்ள நிலையில் பேச்சுவார்த்தைக்கு வர தயாராக இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதை சத்தீஸ்கர் மாநில அரசு நிராகரித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கையில், மாவோயிஸ்ட்களின் முகாம்கள் அடுத்தடுத்து அழிக்கப்படுகின்றன. ஏராளமான மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.தங்கள் தரப்பில் இழப்புகள் அதிகமான நிலையில், மாவோயிஸ்ட்டுகள் அரசுடன் சமாதானம் பேச தயாராக இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
'தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் என்று மாவோயிஸ்ட்டுகள் மத்திய குழு தரப்பில் கூறப்பட்டுள்ளதாக' அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர், அபய் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கை விவரம்:
சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில், "ஆப்ரேஷன் காகர்'எனப்படும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் நடத்தப்படும் தாக்குதலின் ஒரு பகுதியாக புதிய முகாம் அமைப்பதை நிறுத்தினால் பேச்சு வார்த்தைக்கு வருகிறோம்.
ராணுவத்தாக்குதலால், 400க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட் தலைவர்கள் மற்றும் போராளிகள் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். பெண் மாவோயிஸ்டுகள் பாலியல் வன்முறையை அனுபவித்துள்ளார்கள். தாக்குதல் நடவடிக்கைளை நிறுத்தினால், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சத்தீஸ்கர் துணை முதல்வரும் உள்துறை அமைச்சருமான விஜய் சர்மா கூறியதாவது:
மாவோயிஸ்ட்டுகளில் மத்திய குழு அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படும் கருத்துக்கள் குறித்து சரிபார்க்க வேண்டும். அது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அவர்கள் கூறும் கருத்துக்கள் ஆலோசனை செய்யும் அளவுக்கு ஏற்றது அல்ல.இதற்கு முன்பு அவர்கள், அமைதி பேச்சுவார்த்தைக்கு அரசிடம் கோரியிருந்தனர். பாதுகாப்பு படைகளின் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றனர். அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
அவர்கள் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். அதுவே சரியாக தீர்வாக அமையும்.
மாவோயிஸ்டு தரப்பில் மத்திய மற்றும் மாநில அரசின் பாதுகாப்பு படையின் பாலியல் துன்புறுத்தல்கள் என்பது முற்றிலும் தவறான குற்றச்சாட்டுகள். அரசு தரப்பில் ஏற்கனவே, அமைதி பேச்சுவார்த்தைக்கு குழுக்கள் அமைக்கப்பட்டுவிட்டன. மாவோயிஸ்ட்டுகள் தரப்பில் குழுவோ மற்றும் குறிப்பிட்ட நபரோ நிபந்தனையுடன் கோரிக்கை விடுக்கிறார்கள். அதற்கு வாய்ப்பில்லை.
சத்தீஸ்கர், ஆந்திராவில் முன்பு நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தது. வன்முறை முழுமையாக நிறுத்தப்படாவிட்டால் பேச்சுவார்த்தை இல்லை என்பதுதான் அரசியல் கொள்கை.
இவ்வாறு விஜய் சர்மா கூறினார்.
வாசகர் கருத்து (3)
Barakat Ali - Medan,இந்தியா
03 ஏப்,2025 - 20:48 Report Abuse

0
0
Reply
Sampath Kumar - chennai,இந்தியா
03 ஏப்,2025 - 18:48 Report Abuse

0
0
Reply
M R Radha - Bangalorw,இந்தியா
03 ஏப்,2025 - 17:40 Report Abuse

0
0
Reply
மேலும்
-
'எம்புரான்' பட தயாரிப்பாளர் நிறுவனங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
-
கேரள முதல்வர் மகள் வீணாவுக்கு குறி; மோசடி வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி
-
மைக்ரோசாப்ட் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு; மலரும் நினைவுகளில் மூழ்கிய பில்கேட்ஸ்!
-
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பாதிரியார் சுட்டுக்கொலை
-
மங்களநாதர் சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
-
மருதமலை முருகன் கோவிலில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் பரவசம்
Advertisement
Advertisement