மீட்டர் பெட்டி எரிந்து சேதம்

அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கம் வில்லியனுார் செல்லும் சாலை, என்.ஆர்., நகரை சேர்ந்தவர் வேளாங்கண்ணி, 52, இவரது வீட்டு, மீட்டர் பெட்டியில் இருந்து நேற்று இரவு 7:00 மணியளவில் திடீரென தீ பற்றி எரிந்தது. இதுகுறித்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில், மீட்டர் பெட்டி முழுவதும் எரிந்து சேதமானது. மின் கசிவினால், தீ விபத்து ஏற்பட்டதாக, தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

Advertisement