வக்ப் மசோதாவிற்கு எதிர்ப்பு: நிதிஷ் கட்சியில் இருந்து எம்.பி.,க்கள் ராஜினாமா

புதுடில்லி: வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆதரவு அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள எம்.பி.,க்கள் இரண்டு பேர், கட்சியில் இருந்து ராஜினாமா செய்தனர்.
எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே லோக்சபாவில் நேற்று வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பிறகு, இம்மசோதா நள்ளிரவில் நிறைவேறியது.
இந்நிலையில், இன்று இந்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இம்மசோதாவிற்கு பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான தெலுங்குதேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு அளித்து உள்ளன.
இந்நிலையில், மசோதாவிற்கு ஆதரவு அளிக்கும் நிதீஷ்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி எம்.பி.,க்கள் முகமது காசிம் அன்சாரி மற்றும் முகமது நவாஸ் மாலிக் ஆகியோர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து உள்ளனர். முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக அவர்கள், நிதீஷ்குமாருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளனர்.













மேலும்
-
இரு நாட்டு உறவை கெடுக்கும் வகையில் செயல்படக்கூடாது: முகமது யூனுசிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
-
புதிய மதம் வரப்போகுது : இமாம் புது தகவல்
-
அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
-
வக்ப் மசோதாவை ஆதரித்த முஸ்லிம் நபர் மீது தாக்குதல்; 3 பேர் கைது
-
தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்கள், நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
கர்நாடக அரசு தீவிரம்: மேகதாது விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்