ரபாடா விலகல்: சிக்கலில் குஜராத்

புதுடில்லி: பிரிமியர் லீக் தொடரில் இருந்து குஜராத் வீரர் ரபாடா விலகினார்.
இந்தியாவில் நடக்கும் பிரிமியர் லீக் கிரிக்கெட் 18வது சீசனுக்கான குஜராத் அணியில் தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடா (ரூ. 10.75 கோடி) இடம் பெற்றிருந்தார். பஞ்சாப் (1/41), மும்பைக்கு (1/42) எதிராக பெரிய அளவில் சோபிக்காத இவர், பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் களமிறங்கவில்லை. இந்நிலையில் ரபாடா, சொந்த காரணங்களுக்கான இத்தொடரில் இருந்து விலகி, தென் ஆப்ரிக்கா திரும்பினார் என, குஜராத் அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இவருக்கு பதிலாக தென் ஆப்ரிக்காவின் ஜெரால்டு கோட்ஸி அல்லது ஆப்கானிஸ்தான் 'ஆல்-ரவுண்டர்' கரீம் ஜனத் 'லெவன்' அணிக்கு தேர்வு செய்யப்படலாம்.
சமீபத்தில், பிரிமியர் லீக் தொடரில் இடம் பெற்றுள்ள 'இம்பாக்ட்' விதிமுறை குறித்து ரபாடா வெளிட்ட கருத்து சர்ச்சை ஏற்படுத்தியது. 'இம்பாக்ட்' விதிமுறை பேட்டர்களுக்கு சாதகமானது. இதனால் நிறைய சிக்சர், பவுண்டரி விளாசப்படுகிறது. தவிர அதிக ரன் குவிக்கும் வகையில் ஆடுகளம் அமைக்கப்படுகின்றன. எனவே இப்போட்டியை கிரிக்கெட் என்று அழைக்காமல், 'பேட்டிங்' என்று கூறுங்கள் என தெரிவித்திருந்தார்.
மேலும்
-
புதிய மதம் வரப்போகுது : இமாம் புது தகவல்
-
அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
-
வக்ப் மசோதாவை ஆதரித்த முஸ்லிம் நபர் மீது தாக்குதல்; 3 பேர் கைது
-
தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்கள், நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
கர்நாடக அரசு தீவிரம்: மேகதாது விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
-
பைக்கில் மறைந்திருந்த பாம்பு கடித்து இளைஞர் பலி