அணி மாறுகிறாரா சூர்யகுமார்: மும்பை கிரிக்கெட் சங்கம் மறுப்பு

மும்பை: மும்பை அணிக்காக மட்டுமே சூர்யகுமார் விளையாடுவார் என, எம்.சி.ஏ., தெரிவித்தது.

இந்திய 'டி-20' அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் 34. மஹாராஷ்டிராவை சேர்ந்த இவர், கடந்த 2010 முதல் உள்ளூர் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் சூர்யகுமார், மும்பை அணியில் இருந்து விலகி, கோவா அணிக்காக விளையாடப் போவதாக செய்தி வெளியானது.


இதனை மறுத்து மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ.,) வெளியிட்ட செய்தியில், 'சூர்யகுமார், மும்பை அணியில் இருந்து விலகி கோவா அணியில் இணையப் போவதாக வதந்தி பரவி வருகிறது. இது, முற்றிலும் ஆதாரமற்றது. இவர், தொடர்ந்து மும்பை அணிக்காக விளையாடுவதை பெருமையாக கருதுகிறார்,' என, தெரிவித்திருந்தது.

சமீபத்தில் மும்பை அணியில் இருந்து விலகிய துவக்க வீரர் ஜெய்ஸ்வால், அடுத்த சீசனில் கோவா அணிக்காக விளையாட உள்ளார். இதனால் சூர்யகுமாரும் விலகுவார் என வதந்தி பரவி இருக்கலாம்.
இதேபோல ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் திலக் வர்மாவும், கோவா அணியில் இணையப்போவதாக தவறான தகவல் வெளியானது.

Advertisement