என்.ஆர்.காங்., - பா.ஜ. ஆதரவு வாபஸ் ஏனாம் எம்.எல்.ஏ., பேச்சு வைரலால் பரபரப்பு

புதுச்சேரி: என்.ஆர்.காங்.,.- பா.ஜ., அரசுக்கு தரும் ஆதரவை ஓரிரு தினங்களில் வாபஸ் பெற உள்ளதாக ஏனாம் எம்.எல்.ஏ., கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகின்றது.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்.,- பா.ஜ., கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் ஆகியோர் பா.ஜ.,விற்கு ஆதரவு தந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரிரு தினங்களில் அரசுக்கு தரும் ஆதரவை வாபஸ் பெற உள்ளதாக பொதுமக்களிடம் ஏனாம் எம்.எல்.ஏ., கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் பேசும் வீடியோ வைரலாகி வருகின்றது.

கடந்த 2001 சட்டசபை தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதி மட்டுமின்றி ஏனாம் தொகுதியிலும் முதல்வர் ரங்கசாமி போட்டியிட்டார்.

ஏனாம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் 17,131 ஓட்டுகளுடன் வெற்றிப் பெற்றார். அதன் பிறகு பா.ஜ.,விற்கு தனது ஆதரவு தந்து வருகின்றார்.

ஏனாம் பா.ஜ., அரசியல்வாதியான மறைந்த கொல்லப்பள்ளி கங்காதர பிரதாப்பின் மகன் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக். இவரது தந்தை 2000ம் ஆண்டில் இடைத்தேர்தல் மற்றும் 2001ம் ஆண்டு ஏனாம் தொகுதிக்குப் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.

ஸ்ரீநிவாஸ் அசோக் ஏனாம் தொகுதி புறக்கணிக்கப்படுவதாக கூறி சட்டசபை கூட்டத் தொடர்களில் போராட்டம் நடத்தியுள்ளார்.

இதுகுறித்து , எம்.எல்.ஏ.,வினர் கருத்தை கேட்க தொடர்பு கொண்டபோது, அவரது மொபைல்போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது.

ஆட்சிக்கு சிக்கலா

Advertisement