அரசு பள்ளியில் புது வகுப்பு புகு விழா 

புதுச்சேரி: அரசு தொடக்கப்பள்ளியில் புது வகுப்பு, புகு விழா கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி அரசு தொடக்கப்பள்ளியில் புது வகுப்பு, புகு விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் கீதா தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக நாகராஜ், சேக்கிழார் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்.

பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் சந்தனம் கொடுத்து, பன்னீர் தெளித்து அன்போடு வரவேற்றார்.

நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement