பைக் திருடியவர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி கோர்ட் வளாகத்தில் பைக் திருடிய டிரைவரைபோலீசார் கைது செய்து, 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

உருளையன்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி அந்தோணியார் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, கோர்ட் வளாகத்தில் இருந்த வாலிபர் பைக் ஒன்றை தள்ளிக்கொண்டு வந்துள்ளார். இதைகண்ட போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

இதையடுத்து, அவரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், வில்லியனுார் கீழ் அக்ரகாரம் பகுதியை சேர்ந்த ரகு, 38; டிரைவர் என்பதும், அவர் எடுத்து வந்த பைக் கோர்ட் வளாகத்தில் இருந்து திருடி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிந்து, கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து மற்றொரு திருட்டு பைக்கையை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட ரகுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Advertisement