குட்கா பொருட்கள் விற்றவர் கைது

புதுச்சேரி,: கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

லாஸ்பேட்டை அரசு பள்ளி அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அங்குள்ள பெட்டி கடையில், குட்கா பாக்கெட்டுகள் வைத்து விற்பனை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

கடை உரிமையாளர் பாஸ்கர், 45, கைது செய்து, கடையில் இருந்த ரூ. 13 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement