மதகடிப்பட்டு பாளையம் அரசுப் பள்ளியில் பராமரிப்பு இல்லாத விளையாட்டு மைதானம்

திருபுவனை: புதுச்சேரி மதகடிப்பட்டுபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி (சி.பி.எஸ்.இ.,) சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
பள்ளி வடக்கிலும், தெற்கிலும் 5 ஏக்கர் பரப்பளவில் விசாலமான விளையாட்டு மைதானம் இருந்தும் பராமரிப்பு இன்றி உள்ளது. மழைக் காலங்களில் 3 மாதங்களுக்கு விளையாட்டு மைதானம் சேறும் சகதியமாக இருந்தது.
தற்போது கோடைகாலத்தில் பள்ளி அருகே 3 ஏக்கர் பரப்பளவில் அமைந்த விளையாட்டு மைதானம் பராமரிப்பு இன்றி, மழைக்காலத்தில் முளைந்த புல், பூண்டு மற்றும் செடி, கொடிகள் காய்ந்த நிலையில் உள்ளதால் மாணவ-மாணவிகள் விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
பள்ளிக்கு விசாலமான விளையாட்டு மைதானம் இருந்தும் மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே பள்ளி விளையாட்டு மைதானம் இருந்தும் மாணவ - மாணவிகள் பயன்பெறும் வகையில் ஜேசிபி., இயந்திரம் மூலம் சுத்தம் செய்து, தொடர்ந்து பராமரிக்கவும், பள்ளியைச் சுற்றிலும் பாதுகாப்பான சுற்று மதில் சுவர் அமைக்கவும், மாணவமாணவிகளுக்கு மாணவர்கள் தங்களது சைக்கிள்களை பார்க்கிங் செய்ய, சைக்கிள் ஸ்டாண்டு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர புதுச்சேரி அரசும், கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
தர்பூசணி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்: அன்புணி வலியுறுத்தல்
-
வக்ப் வாரிய பிரச்னையில் சிக்கிய 1800 ஆண்டு பழமை வாய்ந்த கோவில்; ராஜ்யசபாவில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்டம்
-
வக்ப் மசோதாவிற்கு எதிர்ப்பு: நிதிஷ் கட்சியில் இருந்து எம்.பி.,க்கள் ராஜினாமா
-
அணி மாறுகிறாரா சூர்யகுமார்: மும்பை கிரிக்கெட் சங்கம் மறுப்பு
-
இரட்டை இலை சின்ன வழக்கு: விசாரணைக்கு காலக்கெடு கோரி இபிஎஸ் மனு
-
ரபாடா விலகல்: சிக்கலில் குஜராத்