ராஜிவ்காந்தி கல்லுாரியில் விளையாட்டு போட்டி

அரியாங்குப்பம்: தவளக்குப்பம் ராஜிவ்காந்தி கலை கல்லுாரியில் நடந்த விளையாட்டு போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.
தவளக்குப்பம் ராஜிவ்காந்தி கலை கல்லுாரியில், கல்வியாண்டை நிறைவு செய்யும் வகையில், மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. விளையாட்டு மைதானத்தில், இரண்டு நாட்கள் நடந்த போட்டியில், வாலிபால், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது.
அதனை தொடர்ந்து, போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில், கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) மோனிஷா, தலைமை தாங்கினார். கல்லுாரி உடற்கல்வி இயக்குநர் ஆதவன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில், கல்லுாரி பேராசிரியர்கள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தர்பூசணி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்: அன்புணி வலியுறுத்தல்
-
வக்ப் வாரிய பிரச்னையில் சிக்கிய 1800 ஆண்டு பழமை வாய்ந்த கோவில்; ராஜ்யசபாவில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்டம்
-
வக்ப் மசோதாவிற்கு எதிர்ப்பு: நிதிஷ் கட்சியில் இருந்து எம்.பி.,க்கள் ராஜினாமா
-
அணி மாறுகிறாரா சூர்யகுமார்: மும்பை கிரிக்கெட் சங்கம் மறுப்பு
-
இரட்டை இலை சின்ன வழக்கு: விசாரணைக்கு காலக்கெடு கோரி இபிஎஸ் மனு
-
ரபாடா விலகல்: சிக்கலில் குஜராத்
Advertisement
Advertisement